• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருதி உறையாமை நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்து பொருட்களை கொள்வனவு செய்தல்
- குருதி உறையாமை நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Concentrated Monoclonal Purified மற்றும் Detergent Treated Dried Factor புட்டிகள் 52,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 3,172,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு சுவிற்சர்லாந்தின் Baxalta GmbH நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.