• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டுகளில் ஈடுபடும் போது தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியல் உள்ளடக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாரளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுகளில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுக்களின் போது பாவனை தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் உள்ளடக்கப்பட்ட 2019 02 11 ஆம் திகதியிடப்பட்டதும் 2110/2 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.