• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக மற்றும் முகாமைத்துவ கட்டமைப்பை மீளமைப்பதற்காக 1985 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேசிய கல்வி நிறுவன சட்டத்தை திருத்துதல்
- கல்வித் துறையில் தரம் மிக்க அபிவிருத்தியின் பொருட்டு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்குதல், பாட விதான அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்த தொழில் சார்பாளர்களின் தொழில் ரீதியிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பட்டப்பின் படிப்புகளை வழங்குதல், கல்வித் துறையில் ஆராய்ச்சி மற்றும் கற்கைகளை மேற்கொள்ளல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு தேசிய கல்வி நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை நிருவகிப்பதற்கு சபையொன்றை தாபிக்கப்பட்டுள்ளதோடு, நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த நிறுவனத்தின் நிருவாகப் பணிகளை மீள் கட்டமைக்கும் தேவை உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேசிய கல்வி நிறுவனத்தின் கற்கை நடவடிக்கைகள் சபையின் தலைவரானவரை நிறுவனத்தின் நிருவாக சபையின் நிரந்தர உறுப்பினர் ஒருவராக உத்தியோகபூர்வமாக நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1985 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேசிய கல்வி நிறுவன சட்டத்தை திருத்துவதற்காக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.