• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பிலான விலை சூத்திரம்
- இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் பொருத்தமான தீர்வொன்றினை கண்டறியும் நோக்குடன் நியமிக்கப்பட்ட குழுவினால் சருவதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதாசார மாற்றம் என்பவற்றைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நுகர்வோருக்கும், அரசாங்கத்திற்கும் அதேபோன்று பால்மா கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை சூத்திரமொன்று பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை சூத்திரம் நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபையின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.