• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச யகாபெந்தி எல அணைக்கட்டின் அபிவிருத்தி
- மாகந்துர, கந்தேபொல, கொஸ்வத்த மற்றும் யக்தெஸ்ஸாவ பிரதேசங்களிலுள்ள விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பழைய யகாபெந்தி எல அணைக்கட்டு கைவிடப்பட்டுள்ளமையினால் இந்தப் பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் பெரும்போகம் மற்றும் சிறுபோகம் ஆகிய இரண்டு போகங்களிலும் பாரிய நீர்ப் பற்றாக்குறைக்கு முகம் கொடுக்கின்றனர். இந்த கடும் நீர்ப் பற்றாக்குறைக்கு மாற்று வழியாக புதிய இடமொன்றில் அணைக்கட்டினை நிர்மாணித்து மகாஓயாவின் நீரை இரத்மல்ஓயாவுக்கு திசை திருப்பும் பொருட்டு புதிய யகாபெந்தி எல அணைக்கட்டு அபிவிருத்தி பிரேரிப்பானது திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாஓயவுக்கு குறுக்காக 76.8 மீற்றர் நீளம் கொண்ட அணைக்கட்டினை நிர்மாணித்தல், பிரதான கால்வாய் ஊடாக உள்வாய் கட்டமைப்பினை நிர்மாணித்தல், 14.8 கிலோ மீற்றர் நீளமான இடையீட்டு கால்வாயொன்றை நிர்மாணித்தல், கிளை மற்றும் பிரிவு கால்வாய்களை நிர்மாணித்தல், பயிர்ச் செய்கை பிரதேசம் முழுவதுமுள்ள உள்வாய்களை விருத்தி செய்தல், கந்தபொலஆற்றுக்கு குறுக்காக அனுகம்பிட்டிய கபடா குளத்தை நிர்மாணிப்பதற்கு உத்தேச திசைதிருப்பு அணைகட்டுக்கு மேல்மட்ட வௌ்ளப்பெருக்கு பாதுகாப்பு மதிலை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சாத்தியத்தகவாய்வு மற்றும் சுற்றாடல் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.