• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1993 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தைத் திருத்துதல்
- தேயிலைச் செய்கை தொடர்பிலான சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தல், தேயிலைச் சபையின் ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறுபட்ட தரப்புகளுக்கு வழங்குதல், தேயிலை ஆராய்ச்சி சபை சட்டம் உட்பட, பிற சட்டங்களுக்கு இடையிலுள்ள ஒவ்வாமையை தடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் தேயிலை ஆராய்ச்சி சபையின் பணிப்பாளர் சபையின் கட்டமைப்பை மீளமைத்தல் போன்ற திருத்தங்களை உள்ளடக்கி 1993 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.