• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகத்தின் மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில் தவணைத் தொகையை அதிகரித்தல்
- இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகமானது தொழிநுட்ப கல்வி தொடர்பிலான உயர் தேசிய டிப்ளோமாவை வழங்கும் பொருட்டு நாட்டில் தாபிக்கப்பட்டுள்ள முதன்மை நிறுவன மொன்றாவதோடு, தற்போது இதன் 19 பிராந்திய நிலையங்களில் 20,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல மற்றும் மாணவர் உதவுத்தொகை 2015 ஆம் ஆண்டில் அதிகரிக்கப்பட்டதோடு, தற்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு 5,000/- ரூபாவைக் கொண்ட மாதாந்த மஹாபொல புலமைப்பரிசில் தொகையும் 4,000/- ரூபாவைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர் உதவித் தொகையும் இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகத்தின் மாணவர் ஒருவருக்கு 1,500/- ரூபாவைக் கொண்ட மஹாபொல புலமைப்பரிசில் தொகையும் வழங்கப்படுகின்றது. இதற்கமைவாக, இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிறுவகத்தின் மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில் தவணைத் தொகையான 1,500/- ரூபாவைக் 2,500/- ரூபாவாக அதிகரிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.