• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொல்பொருளியல் கலைப்பொருட்களை பாதுகாப்பதற்கும் அவற்றின் அழிவு, திருட்டு மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கடத்தல் என்பவற்றை தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தல்
- 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க கலைப்பொருள் கட்டளைச் சட்டமானது 1998 ஆம் ஆண்டில் கடைசித் தடவையாக திருத்தப்பட்டதுடன், கலைப்பொருட்களை பாதுகாப்பது தொடர்பிலுள்ள தற்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு சட்ட ஏற்பாட்டினை இற்றைப்படுத்தும் முக்கியத்துவத்தின் மீது அரசாங்கம் அதன் கவனத்தை செலுத்தியுள்ளது. இதற்கிணங்க, தொல்பொருளியல் கலைப்பொருட்களின் அழிவு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் திருட்டு மற்றும் சட்டத்திற்குப் புறம்பான ஏற்றுமதியைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கையையும் எடுப்பதற்கும் அத்துடன் தொல்பொருளியல் கலைப்பொருட்களுக்கு எதிராக புரியப்படும் குற்றங்கள் தொடர்பில் பகிரங்க விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் மற்றும் இது தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு பொது மக்களை தூண்டுவதற்கும் அத்துடன் தொல்பொருளியல் கலைப் பொருட்களுக்கு ஏற்படும் சேதங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணங்களை அதிகரிப்பதற்கும் உரிய சட்டங்களைத் திருத்தும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.