• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனம் செய்தல்
- 2019‑01‑05 ஆம் திகதி பாளி மற்றும் சிங்கள மொழிகளில் ஆவணப்படுத்தப்பட்ட, அதன் குறிப்புகள் (அட்டக்கத்தா) அடங்கிய புனித திரிபீடகமானது மாத்தளையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க அளுவிகாரையில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் தேசிய மரபுரிமையொன்றாக பிரகடனப்படுத்தப் பட்டதுடன் அதன் செயல்வலுவின் பொருட்டு 2019 பெப்ரவரி 07 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள, புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையொன்றாக பிரகடனப்படுத்தியமைக்கான பிரேரிப்பை 2019 மார்ச் 23 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்புக்கு (யுனெஸ்கோ) கையளிப்பதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்நிகழ்வை வெற்றியடையச் செய்யும் நோக்குடன், எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதியிலிருந்து மார்ச் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொது மக்களின் பங்குபற்றலுடன் "திரிபீடகாபிவந்தான" என்னும் பெயரிடப்பட்ட நாடுதழுவிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடாத்துவதற்கும், புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனம் செய்வதுடன் தொடர்புபட்ட தேசிய வைபவத்தை கண்டியிலுள்ள புனித தலாதா மாளிகையின் மஹமளுவ (மாடவரிசை) மனையிடத்தில் நடாத்துவதற்கும் மற்றும் இது தொடர்பில் தேவையான ஒழுங்குகளைச் செய்வதற்கும் சனாதிபதி அதிமேதகைய மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.