• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை செய்துக் கொள்ளல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளுக்கு இணங்க, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எட்டு (08) மாதக் காலப்பகுதிக்கு மேர்பன் மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை Swiss Singapore Overseas Enterprise Pte. Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.