• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான பசளையை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளுக்கு இணங்க, வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Company Ltd நிறுவனம் சார்பில் ஏப்ரல் மாதத்திற்குத் தேவைப்படும் 27,400 மெற்றிக் தொன் யூரியாவை (Granular) மெற்றிக் தொன் ஒன்று 318.75 ஐக்கிய அமெரிக்க டொலர் விலைக்கு Agri Commodities and Finance நிறுவனத்திலிருந்தும், 3,000 மெற்றிக் தொன் Muriate of Potashஐ மெற்றிக் தொன் ஒன்று 352.85 ஐக்கிய அமெரிக்க டொலர் விலைக்கு Valance International Trading (Pte.) Ltd நிறுவனத்திலிருந்தும் கொள்வனவு செய்வதற்கும் அத்துடன் 10,000 மெற்றிக் தொன் Triple Super Phosphate ஐ மெற்றிக் தொன் ஒன்று 317.00 ஐக்கிய அமெரிக்க டொலர் விலைக்கு Golden Barley International (Pte.) Ltd நிறுவனத்திலிருந்தும் கொள்வனவு செய்வதற்குமான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.