• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் தடயவியல் செயற்பாடுகள் சார்பில் சர்வதேச அனுபவத்தினைக் கொண்ட நிறுவனம் / நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்தல்
- இலங்கை மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு செயற்பாடுகள் சார்பில் உலகளாவிய பிரயோகம் மற்றும் சர்வதேச அனுபவத்தினைக் கொண்ட நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தொழினுட்ப பிரேரிப்பு மற்றும் நிதி பிரேரிப்பின் மேற்போந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் பெறுபேறுகளின் அடிப்படையிலும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைஞர் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளுக்கு இணங்கவும் தெரிவுசெய்யப்பட்ட BDO India LLP நிறுவனத்திற்கும் KPMG Sri Lanka நிறுவனத்திற்கும் உரிய ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.