• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டையில் ஏற்றுமதிக்கான பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றைத் தாபித்தல்
- சிங்கபூரின் Silver Park International (Pvt) Ltd. நிறுவனத்திற்கும் ஓமான் சுல்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சுக்கும் இடையில் கூட்டுத்தொழில் முயற்சியொன்றாக ஏற்றுமதிக்காக அம்பாந்தோட்டையில் வருடமொன்றிற்கு 10 மில்லியன் மெற்றிக்தொன் இயலளவுடன்கூடிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையமொன்றை தாபிப்பதற்கான பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உரிய முதலீட்டு பிரேரிப்பின் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பிரேரிக்கப்பட்ட தொழிற்சாலையை தாபிப்பதற்காக குத்தகை அடிப்படையில் முதலீட்டாளருக்கு 400 ஏக்கர் கொண்ட காணியை குறித்தொதுக்கும் பொருட்டு அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.