• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட, கொட்டபொல மற்றும் பிட்டபத்தர பிரதேச செயலக பிரிவுகளுக்குரிய கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்
- மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட, கொட்டபொல மற்றும் பிட்டபத்தர பிரதேச செயலக பிரிவுகளுக்குரிய கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள போதிலும் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இக்கருத்திட்டங்களை துரிதமாக ஆரம்பிக்க முடியவில்லை. ஆதலால், கட்டவல, ஹெரகல, ரஜவத்த, கெக்குனஹேன, இசுரு உயன, உடதெனிய, நிஸ்ஸங்கபுர, சியம்பலகொட கிழக்கு யூத் சேர்விஸ் வீதி மற்றும் சியம்பலகொட வீதிகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவைப்படும் ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.