• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சிறுவர்களுக்கான மாற்று பாதுகாப்பு கொள்கையொன்றை அறிமுகப்படுத்துதல்
- அவர்களின் சொந்த குடும்பத்திற்குள்ளேயே காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காரணமாக தமது குடும்பங்களை விட்டகன்று ஆபத்திலுள்ள பிள்ளைகளை அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதன் மூலம் தடுத்துவைத்தல், அவர்களின் குடும்பங்களை விட்டகன்ற பிள்ளைகளை உறவினர் ஒருவரின் கட்டுக்காப்பில் கையளித்தல், பிள்ளைகளை தத்தெடுப்பதற்காக கொடுத்தல் மற்றும் நிறுவன மயப்படுத்தல் மூலம் பொருத்தமான ஆளொருவரின் பாதுகாப்பின் கீழ் அவர்களை வைத்திருத்தல் போன்ற மாற்று பாதுகாப்பு கொள்கைகள் தற்போது இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன
ஆதலால், கூறப்பட்ட மாற்று பாதுகாப்பு முறைகளை பயனுறுதிவாய்ந்த விதத்தில் அமுல்படுத்துவதற்காக மாற்று பாதுகாப்பு கொள்கையை அறிமுகப்படுத்தும் பொருட்டு, பிள்ளைகளுக்கான மாற்று பாதுகாப்பை வழங்குவதற்கான காரணங்கள் இடரை நோக்கியுள்ள பிள்ளைகளை இனங்காணுதல், இலங்கையில் பொருத்தமான மாற்று பாதுகாப்பு முறைமைகளை இனங்காணுதல், மாற்று பாதுகாப்பு குறிப்பீட்டின் சட்டப்பின்னணி, நிறுவன மயப்படுத்தப்படுவதிலிருந்து பிள்ளைகளைத் தடுப்பதற்கான நுட்பங்களை இனங்காணுதல், பிள்ளைகளுக்கான சேவை வழங்குநர்களை இனங்காணுதல், சட்டத்தின் முன் கொண்டுவரப்படும் பிள்ளைகள் சார்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், பிள்ளைகளின் சமூகமயப்படுத்தல் மற்றும் மாற்று பாதுகாப்பு கொள்கைகளின் அமுலாக்கம் போன்ற பிரதான அம்சங்களின் மீது கவனத்தை குவித்து தயாரிக்கப்பட்ட கொள்கை தொடர்பில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.