• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சிவில் விமான சேவைகள் கொள்கை
- தேசிய சிவில் விமான சேவைகள் கொள்கையைத் திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கும் அதனை மீள சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் இக்கொள்கை பற்றிய வரைவு சட்டமூலத்தை மேலும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இறுதியாக திருத்தப்பட்ட வரைவை இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.