• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"அங்கம்" என்றழைக்கப்படும் கலையை பேணிப் பாதுகாத்து மேம்படுத்துதல்
- சுதேச தற்காப்புக் கலை நுட்பம் ஒன்றான "அங்கம்பொர" கலையிலிருந்து பங்களிப்பு காணப்பட்டதுடன், இலங்கை தேசத்திற்கு எதிராக வழிப்படுத்தப்படும் வௌிநாட்டு தலையீடுகளில் வெற்றியை அடைந்து கொள்வதற்கு அளப்பெரிய முக்கியத்துவத்தை கொண்டவர்களாக அத்தகைய செயற்பாட்டாளர்கள் காணப்பட்டிருந்தனர். இலங்கை வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்தக்கூடிய தனித்துவமான கலை நுட்பமொன்றாக எதிர்கால சந்ததியினருக்கான அங்கம்பொர தற்காப்புக்கலை நுட்பங்களை பேணி காப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. ஆதலால், அங்கம்பொர தற்காப்புக் கலை பிரயோகத்தை தடைசெய்வது தொடர்பில் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தினால் பிரசுரிக்கப்பட்ட 1817 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதன் மூலம் கூறப்பட்ட தற்காப்புக் கலையையைும் அதனுடன் இணைந்த கலை நுட்பங்களையும் தேசிய மரபுரிமையொன்றாக பிரகடனம் செய்வதற்கும் புதிய அரசாங்க வர்த்தமானியொன்றை வௌியிடுவதன் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.