• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வறட்சி அபாயத்தை தணிக்கும் நடவடிக்கைகளை செயற்படுத்துதல்
- யாழ்ப்பாண பிரதேசத்தில் திடீரென நிகழ்ந்துள்ள நீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சியில் வீட்டுத்துறை மற்றும் கமத்தொழில் நோக்கங்களுக்கு தேவைப்படும் நீரை வழங்குவதற்கான குறுகியகால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கான மதிப்பீடொன்றை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் சமர்ப்பித்துள்ளார். அதற்கிணங்க, 54.2 மில்லியன் ரூபா செலவில் அல்லைப்பிட்டி மற்றும் நுணாவில் மேற்கு பிரதேசங்களில் நீர்சேமிப்பு தாங்கிகளை நிர்மாணிப்பதற்கும் வேதரடைப்புக்குளம், சாம்பலோடை, புங்குடுதீவு கிழக்கு மற்றும் மடத்துவௌி ஆகிய பிரதேசங்களில் உவர்நீர் தடுப்பு திட்டத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கும் மற்றும் மெலிஞ்சிமுனைக் குளத்தை புனரமைப்பு செய்வதற்கும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.