• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவ வழங்கல் வசதிகளை பலப்படுத்துதல்
- சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் 134 வைத்தியசாலைகளினதும் மருத்துவ வழங்கல் பிரிவின் விடய நோக்ககெல்லையின் கீழ்வரும் 26 பிராந்திய மருத்துவ வழங்கல் பிரிவுகளினதும் மருந்து களஞ்சிய வசதிகளை தரமுயர்த்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சுகாதார நிறுவனங்களின் துரித முன்னேற்றத்தையும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் கருத்திற்கொண்டு, நாடுபூராகவும் பரந்துள்ள மருத்துவ வழங்கல் பிரிவுகளில் கிடைக்கக் கூடியதாகவுள்ள வசதிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கிணங்க, அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 160 நிறுவனங்களுக்கு மேலதிகமாக, நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பு 2020-2022 இற்குள் 3,988.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் 430 பிரதேச வைத்திய சாலைகளினதும் 276 ஆரம்ப சுகாதார அலகுகளினதும் களஞ்சிய வசதிகளை தரமுயர்த்துதல் தொடர்பில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.