• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டாளர்களுக்கும் அரசாங்க மருந்து பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் மருந்துகள் உற்பத்திக்காக கூட்டு தொழில்முயற்சிகளை தாபிப்பது பற்றிய தற்போதைய நிலைமை
- மருந்துகளின் இறக்குமதி மீது செலவிடப்படும் அந்நியச் செலாவணியை சேமிப்பதற்கும் மருந்துகளின் விலைகளை நிலையாக பேணுவதற்கும் இலங்கை மருந்துப் பொருள் உற்பத்தி கைத்தொழிலின் அபிவிருத்தியானது வழிவகுக்கும். ஆதலால், அவசியமான புதிய மற்றும் உயர்தரமான மருந்து பொருட்களை தடங்கலின்றி அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்காக சாத்தியமான முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் அவர்களுடன் அரசாங்க மருந்து பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனம் கூட்டு தொழில்முயற்சிகளை தாபிப்பதற்கும் அமைச்சரவை யினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய அங்கீகாரத்தின் பேரில், 17 நிறுவனங்கள் அரசாங்க மருந்து பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்துடன் கூட்டு தொழில்முயற்சிகளை தாபித்துள்ளதுடன் அவற்றின் உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன எனும் நோக்கத்திற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவையின் தகவலின் பொருட்டு இது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.