• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி போதனா வைத்திசாலையில் ஐந்து மாடி இருதய நோய் பராமரிப்பு தொகுதியை நிர்மாணித்த
- இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக தாபிக்கப்பட்ட மருத்து பீடத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படும் மாணவர்ளுக்கு சிகிச்சை பயிற்சிகளை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கில் இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையை போதனா வைத்திசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை சேவைகளுக்காக போதுமான இட வசதி தற்போது இல்லாமையினால் 5,000 சதுர மீற்றர்கள் கொண்ட ஐந்து மாடி கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 படுகைகளைக் கொண்ட இருதய நோய் காவறைகள், 40 படுகைகளைக் கொண்ட Cardiology Thoracic சிகிச்சைக் காவறைகள், Cardiac Characterization ஆய்வுகூடம், Excise ECG அறை, Halter Monitoring வசதியுடனான ECG பிரிவு, Eco - Cardiography அறைகள் 02, 10 படுக்கைகளைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சை அறைகள் உட்பட ஏனைய உபகரண சேவை வசதிகளும் வழங்கப்படவுள்ளன. இதற்கமைவாக, 1,325.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீ்ட்டில் 2020 - 2022 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் இரத்தினபுரி போதனா வைத்திசாலையில் ஐந்து மாடி இருதய நோய் பராமரிப்பு தொகுதியை நிர்மாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.