• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தை திருத்துதல்
- 1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தை லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என மாற்றி இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழும் அத்தகைய நிருவாக ரீதியிலான பணிகளை இற்றைப்படுத்தும் பொருட்டு இந்த சட்டத்தின் 3.2 ஆம் 15 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை வர்த்தகம் என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுக்கு கையளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தினை உயர் கல்வி என்னும் விடயம் கையளிக்கப்பட்டுள்ள அமைச்சுக்கு கையளித்தல் போன்ற திருத்தங்களை உள்ளடக்கி இந்த சட்டத்தின் 3.2 ஆம் 15 ஆம் 19 ஆம் பிரிவுகளை திருத்தி சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.