• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான அரசாங்கத்துறை பதவியணி பற்றிய அறிக்கை
- 2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான அரசாங்கத்துறை பதவியணி பற்றிய அறிக்கை அமைச்சரவையின் கவனத்தின் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2018 செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதியன்றுக்கு அரசாங்கத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணி 1,587,803 எனவும் இதில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள பதவியணி 1,373,338 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அரசாங்கத் துறையின் சில நிறுவனங்கள் தமது சேவை தேவைகளை கவனத்தில் கொள்ளாது ஆட்சேர்ப்புச் செய்வதனை தடுக்கும் பொருட்டு உரிய வழிமுறைகள், சட்டங்கள் உட்பட ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் தேவை, சேவைக்கான தேவைகளை கருத்தில் கொள்ளாது ஆட்சேர்ப்புச் செய்வதன் காரணமாக அத்தகைய சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் சிறப்பான சேவையை பெற்றுக் கொள்வது தொடர்பிலான பிரச்சினை எழுந்துள்ளது எனவும், புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யும் போது உரிய முறையில் வேலைகள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் மாத்திரம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் உடன்பாட்டுடன் ஆட்சேர்ப்புச் செய்வது பொருத்தமான தெனவும் இந்த அறிக்கையின் ஊடாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான அரசாங்கத்துறை பதவியணி பற்றிய அறிக்கையிலுள்ள தரவுகள் சம்பந்தமாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.