• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமச்சட்டத்தை திருத்துதல்
- 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தற்போது 20 வருடங்களுக்கு மேல் செயலாற்றியுள்ளதோடு, இதனை நிகழ்காலத்திற்கு ஏற்றவிதத்தில் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பொருத்தமான ஒழுங்குறுத்துகை வழிமுறையொன்றின் மூலம் அரசாங்கத்துறையின் கணக்கீட்டு தர ஒழுங்குறுத்துகையை சான்றுப்படுத்தும் தேவை, கணக்காய்வு கம்பனிகளின் செயற்பாட்டு தரத்தை பாதுகாப்பதற்கான ஒழுங்கு விதிகளை வழங்குதல், இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தர ஆய்வுசபையை பலப்படுத்துதல் போன்ற அத்தியாவசிய பிரேரிப்புகளை உள்ளடக்கி இந்த சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.