• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனாதிபதி ஊடக விருது விழா
- ஊடகவியலாளர்களை ஊக்குவிப்பதற்காக சனாதிபதி ஊடக விருது விழாவொன்றை வருடாந்தம் நடாத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த விருது விழாவில் கௌரவிக்கப்படும் விருது பெறுபவர்கள், வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர்கள் சார்பில் பணப் பரிசுகளை வழங்குவதற்கும் நூலாசிரியர் சபையில் செயலாற்றும் கல்விமான்கள் மற்றும் இலக்கிய கடிதங்கள் உட்பட விமர்சனம் முன்வைத்த நூலாசிரியர்களின் பணியினை பாராட்டுவதற்கும் மதிப்பூதியமொன்றை வழங்குவதற்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.