• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செலவு மீது அடிப்படையாகக் கொண்ட விலைக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் வசதியினை வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு பங்களிப்பு நல்கிய பல்பொருள் விற்பனை நிலையங்களினால் ஏற்கவேண்டி நேரிட்ட நட்டத்தினை மீளளித்தல்
- 2017 திசெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 2018 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிவரை நான்கு மாத காலப்பகுக்கு அரிசி, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, நெத்தலி மற்றும் ரீன்மீன் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை நுகர்வோருக்கு சலுகை அடிப்படையில் பேணுவதற்காக செலவு மீது அடிப்படையாகக் கொண்ட விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு பல்பொருள் விற்பனை நிலையங்களினதும் சதொச நிறுவனத்தினதும் ஒத்துழைப்பு அரசாங்கத்தினால் பெறப்பட்டது. இந்த அத்தியாவசிய நுகர்வு பொருட்களை சலுகை விலையில் நுகர்வோருக்கு வழங்கியமையினால் இந்த நிறுவனங்களுக்கு ஏற்கவேண்டி நேரிட்ட நட்டத்தினை கணக்கிட்டு வௌிவாரி கணக்காய்வாளர் ஒருவரின் சிபாரிசின் மீது தீர்வு செய்வதற்கு அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக Cargils (Ceylon) PLC மற்றும் Lanka Sathosa Limited ஆகியவற்றினால் உறப்பட்ட 203 மில்லியன் ரூபாவைக் கொண்ட நட்டத்தினை தீர்வு செய்யும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.