• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு பணிகளை மேம்படுத்துவதற்கான பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
- மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு பணிகளுக்காக இந்திய விமானசேவை அதிகாரசபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்புகள் தொடர்பில் பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவொன்றையும் இதற்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு கருத்திட்ட குழுவொன்றையும் நியமிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் குழு அதன் சிபாரிசுகளை உள்ளடக்கி தயாரித்துள்ள அறிக்கைக்கு அமைவாக தேவையான நிர்மாணிப்பு பணிகளை செய்யும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.