• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச தொழில் அமைப்பின் வலுக்கட்டாய தொழில் சமவாயத்திற்கான மூல ஆவணத்திற்கு செயல்வலுவாக்கம் அளித்தல்
- இலங்கை 1950 ஆம் ஆண்டில் சர்வதேச தொழில் அமைப்பின் 1930 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வலுக்கட்டாய தொழில் சமவாயத்திற்கும் 2003 ஆம் ஆண்டில் 1957 ஆம் ஆண்டின் 105 ஆம் இலக்க வலுக்கட்டாய தொழிலை இல்லாதொழித்தல் பற்றிய சமவாயத்திற்கும் செயல்வலுவாக்கமளித்துள்ளது. பாலின நடவடிக்கைளுக்கு வலுக்கட்டாயமாக தொழிலில் ஈடுபடுத்துதல், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல், புதுப்பாணியிலான அடிமைத்தனம் , மனிதக் கடத்தல் அடங்கலாக வலுக்கட்டாயமான தொழிலுக்கு அமர்த்துதல் தொடர்பிலான போக்கினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 1930 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வலுக்கட்டாய தொழில் சமவாயத்திற்கு மேலதிக ஏற்பாடொன்றாக 2014 ஆம் ஆண்டில் வலுக்கட்டாயமாக தொழிலுக்கு அமர்த்துதல் பற்றிய சமவாயம் சார்பில் 29 ஆம் இலக்க மூல ஆவணம் உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கமைவாக, இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்பு இந்த மூல ஆவணத்தின் மூலம் செய்யப்பட்டுள்ள பிரேரிப்புகளுக்கு சமமாக அமையும் விதத்தில் 1930 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வலுக்கட்டாய தொழில் சமவாயத்திற்கு உரியதான 2014 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மூல ஆவணத்திற்கு செயல்வலுவாக்கமளிக்கும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரினால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.