• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகவலுக்கான உரிமைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை தீர்மானங்களுக்குரிய தகவல்களை வழங்குதல்
- 2016 ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை தீர்மானங்களுக்குரிய தகவல்களின் பொருட்டு கோரிக்கை யொன்றைச் சமர்ப்பிக்கும் பிரசை ஒருவருக்கு அவை அமைச்சரவை அலுவலகத்தின் ஊடாகவே இதுவரை வழங்கப்பட்டது. ஆயினும், அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் அது தொடர்புபட்ட தகவல்களை மிக வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் வழங்கும் நோக்கில் இந்த தகவல்கள் உரிய விடயத்துக்குப் பொறுப்பான வரிசை அமைச்சினாலேயே கோரிக்கையினை முன்வைக்கும் பிரசைகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கு சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கமைவாக, தகவலுக்கான உரிமைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் பிரசை ஒருவரினால் செய்யப்படும் கோரிக்கையினை பரிசீலனை செய்து இந்த சட்டத்திலுள்ள வரையறைகளின் கீழ், தமது அமைச்சின் விடய நோக்கெல்லைக்குரியதாக எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானங்கள் மற்றும் அது தொடர்புபட்ட ஆவணங்கள் நேரடியாக பிரசைகளுக்கு வழங்கும் பொருட்டு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுகளின் செயலளர்களுக்கும் அதிகாரத்தினை கையளிப்பதற்கும் ஏதேனும் திட்டவட்டமான அமைச்சரவை விஞ்ஞாபனமொன்றுக்கு ஏற்புடையதாகாத அல்லது அமைச்சொன்றின் விடயநோக்கெல்லைக்கு ஏற்புடையதாகாத தகவல்கள் சம்பந்தமாக அமைச்சரவையினால் அமைச்சரவைக் கூட்டங்களில் 'பிற விடயங்கள்' என்பதன் கீழ் எடுக்கப்படும் தீர்மானங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் அமைச்சரவை அலுவலகத்தினால் வழங்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.