• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் சம்பந்தமான உத்தேச நிகழ்ச்சித்திட்டம்
- 2019 நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் உள்ளடக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட விவாதம் சம்பந்தமான உரை (வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு) 2019 மார்ச் மாதம் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக, வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பிற்கான விவாதமானது 2019 03 06 ஆம் திகதியிலிருந்து 2019 03 12 ஆம் திகதிவரையும் குழுநிலை விவாதமானது 2019 03 13 ஆம் திகதியிலிருந்து 2019 04 05 ஆம் திகதிவரையும் நடாத்துவதற்கும் வரவுசெலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு 2019 04 05 ஆம் திகதியன்று நடாத்தப்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.