• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய மாகாண பாரிய தம்புள்ளை நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் தம்புள்ளை மற்றும் கண்டலம பிரதேசங்கள் வரை நீர் விநியோகத்தை நீடிப்பதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
- உள்ளூராட்சி விருத்தி செய்யும் துறைசார் கருத்திட்டத்தின் கீழான துணைக் கருத்திட்ட மொன்றாக செயற்படுத்தப்படும் மத்திய மாகாண பாரிய தம்புள்ளை நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் தம்புள்ளை மற்றும் கண்டலம பிரதேசங்கள் வரை நீர் விநியோகத்தை நீடிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 565.39 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Squire Mech Engineering (Pvt.) Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.