• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தின் அவசர தேவைகளுக்கு நிலக்கரி கொள்வனவு செய்தல்
- புத்தளம் நிலக்கரி மின் நிலையத்திற்குத் தேவையான 360,00மெற்றிக்தொன் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக சிங்கப்பூரின் M/s Trafigura Pte. Ltd நிறுவனத்திடமிருந்து மெற்றிக்தொன் ஒன்று 91.40 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்னும் விலையில் கொள்வனவு செய்யும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.