• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம், லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆம் பிரிவின் கொதிகலன், காற்றாடி மற்றும் துணைப்பாகங்கள் என்பவற்றின் பராமரிப்புக்கான நிபுணத்துவ மனிதவள சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம்
- புத்தளம் நிலக்கரி மின் நிலையத்தை நிர்மாணித்த பிரதான ஒப்பந்தக்காரரான China Machinery Engineering Corporation நிறுவனத்திற்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் நிலவும் 'மறுசீரமைப்புக்கான தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை' 2019 செப்ரெம்பர் மாதம் வரை செல்லுபடியாகும். இதற்கமைவாக, புத்தளம், லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஆம் பிரிவின் கொதிகலன், காற்றாடி மற்றும் துணைப்பாகங்கள் என்பவற்றின் பராமரிப்புக்கான நிபுணத்துவ மனிதவள சேவைகளை பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு China Machinery Engineering Corporation நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.