• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார் கோட்டையை அபிவிருத்தி செய்தல்
- வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் கல்பிட்டிய பிரதேசதங்களில் அமைந்துள்ள பழைய ஆறு கோட்டைகளை தொல்பொருளியல் திணைக்களத்துடனும் தனியார் துறையுடனும் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்ன் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மன்னார் கேட்டையை அபிவிருத்தி செய்வதற்கு கருத்திட்ட பிரேரிப்பொன்றை தொல்பொருள் திணைக்களம் தயாரித்துள்ளது. இதன் கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய பிரதான பணிகளாக இனங்காணப்பட்டுள்ள இந்த கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள நீர் அகழியை தூர்வாரும் பணிகள் தொடர்பில் நிபுணத்துவம் மிக்க இலங்கை காணிநில மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக செய்துகொள்ளும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.