• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்னியல் மற்றும் இலத்திரனியல் இயந்திரசாதன கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல்தேசிய கம்பனிகளை ஈர்த்தல்
- மின்னியல் மற்றும் இலத்திரனியல் கைத்தொழில் உலகளாவிய பெறுமதிசேர்க்கப்பட்ட விநியோக வலயமைப்பில் இணைந்து வருகின்றதோடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் உற்பத்தி கைத்தொழில் வகுப்பீட்டிற்கு அமைவாக, இந்நாட்டின் மின்னியல் மற்றும் இலத்திரனியல் இயந்திரசாதன கைத்தொழில் துறையானது மத்திய - உயர் தொழினுட்ப மற்றும் உயர் தொழினுட்ப வகுப்புக்கு உரியதாகும். இதற்கமைவாக, வாகனங்கள், தொலைத்தொடர்பாடல், நுகர்வு மின்னியல் பொருட்கள், கைத்தொழில் தானியங்கி இயந்திர செயற்பாடுகள், வலயமைப்பு துணைக்கருவிகளின் உற்பத்தி மற்றும் பல்வேறுபட்ட துறைகளுக்கான துணைக்கருவிகளின் உற்பத்தி என்பன இதில் உள்ளடக்கப்படும். இந்த துறையின் இந்நாட்டு கைத்தொழிலாளர்கள் ISO சான்றிதழைப் பெற்று தேவையான தொழில் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றனர்.
நாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலப்படிவ நிலையிலுள்ள தொடக்கநிலைக் கம்பனிகள் புத்தாக்க மற்றும் உருவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, அதன் பொருட்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் பாரிய கம்பனிகளுடன் இணைவது அத்தியாவசிய மானதாகும். இதற்கிணங்க, இலங்கையில் இத்தகைய தொழில்முயற்சி நிறுவனங்கள் பல்தேசிய கம்பனிகளுடன் இணைந்து செயலாற்றும் வசதிகளை செய்வதற்காக பல்தேசிய கம்பனிகளை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.