• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமானநிலை பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக விசேட பாதுகாப்பு கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டம்
- இலங்கை 1948 ஆம் ஆண்டில் சர்வதேச சிவில் விமானசேவைகள் பற்றிய சமவாயத்திற்கு கைச்சாத்திட்டதோடு, இதற்கமைவாக இலங்கை அதில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அரசாங்க மொன்றாக செயலாற்றுகின்றது. 2001 ஒக்ரோபர் மாதத்தில் நடாத்தப்பட்ட சருவதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் 33 ஆம் கூட்டத்தொடரில் அழிவைத்தரும் ஆயுதங்களாக சிவில் விமானசேவைகளை பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் சிவில் விமானசேவைகள் சார்ந்த பிற பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுத்தல் தொடர்பிலான பிரகடனமானது அங்கீகரிக்கப்பட்டது. இந்த பிரேரிப்பின் பிரகாரம் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நாடொன்றினால் நடைமுறைப்படுத்தப்படும் விமான நிலைய பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் சம்பந்தமாக விசேட பாதுகாப்பு கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று கட்டம்கட்டமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன் III ஆம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள 'உலகளாவிய பாதுகாப்பு ஆய்வு - தொடர்ச்சியான கண்காணிப்பு அணுகுகை' என்பதன் கீழ் நடைமுறைப்படுத்து வதற்காக சருவதேச சிவில் விமானசேவைகள் அமைப்புக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.