• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொம்பனித் தெரு, வேகந்த பிரதேசத்தின் மீள் அபிவிருத்தி
- கொம்பனித் தெரு, வேகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 47 ஏக்கர் கொண்ட நிலப் பிரதேசத்தில் (ஹெக்டயர் 19.4) "நவம்புரய" என பெயரிடப்பட்டுள்ள மீள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச பிரதேசத்தில் அண்ணளவாக சுமார் 1,200 மிகச் சிறிய வீடுகள் தாபிக்கப்பட்டுள்ளமையினால் அவற்றின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் சில தடைகள் எழுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய பிரதேசத்தில் காணி உரிமையாளர்களின் பங்களிப்புடனான வழிமுறையொன்றின் கீழ் அவர்களுக்கு நலன் கிடைக்கக்கூடிய விதத்தில் கொம்பனித்தெரு உட்பட்ட நகர பிரதேசத்தை மீள் அபிவிருத்தி செய்வதற்கான நவம்புர கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.