• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொடைப்பத்திரம் மற்றும் அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாட்டினை முறைப்படுத்தலும் Cadastral வரைபடம் தயாரிக்கும் நடவடிக்கையை நவீனமயப்படுத்தலும்
- காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அளவை வரைபடமொன்று இல்லாத குடியிருப்பு, கமத்தொழில் மற்றும் பிற நோக்கங்களுக்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணித்துண்டுகள் சார்பில் வரைபடங்களை தயாரித்தல், பிணக்கற்ற உரிமையுடன் கூடிய கொடைப்பத்திரங்கள் உட்பட அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், உரிய காணித்துண்டுகளை அளந்து முறையாக வரைபடங்களை தயாரித்து பிணக்கற்ற உரிமையினை உறுதிப்படுத்துதல் போன்றவை செய்யப்படவேண்டியுள்ளன. ஆயினும் இதன் பொருட்டு பயன்படுத்தக்கூடிய மனிதவள மற்றும் பௌதிக வளங்களில் காணப்படும் வரையறை காரணமாக இதற்கு நீண்டகாலம் எடுக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இதற்கிணங்க இந்த பணிகளை வினைத்திறனுடன் நிறைவேற்றும் பொருட்டிலான கருத்திட்டமொன்றை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் சுமார் 732,000 காணித்துண்டுகளை அளந்து சுமார் 696,000 கொடைப்பத்திரங்களை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்தல், உத்தேச கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தை 03 வருட காலத்திற்குள் நடைமுறைப்படுத்துதல் இதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளல் என்பன பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.