• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
- அரசாங்க காணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள கொடைப்பத்திரம் அல்லது ஆதனவளிப்புச் சாதனம் உரித்துடையர்களுக்கு குறித்த காணிகளின் முற்றுரிமை உறுதியை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி காணி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமானது தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.