• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் கரும்பு மற்றும் சீனி கைத்தொழில் அபிவிருத்தியின் பொருட்டு குழுவொன்றை தாபித்தல்
- உள்நாட்டு சீனித் தேவையின் சுமார் 9 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதோடு, மீதி 91 சதவீதமான தேவையானது இறக்குமதியின் ஊடாக ஈடுசெய்யப்படுகின்றது. ஆதலால் சீனி மற்றும் கரும்பு கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதன் மூலம் பாரிய அளவிலான அந்நிய செலாவனியினை சேமிப்பதற்கு இயலுமாகும். இந்த விடயத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கரும்பு செய்கை பண்ணக்கூடிய புதிய காணிகளை இனங்கண்டு கரும்பு செய்கையை விரிவுபடுத்தி இலங்கையில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பொருட்டு கரும்பு செய்கையில் ஈடுபட்டுள்ள பயிர் செய்கையாளர் களுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் உயர் வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் கரும்பு மற்றும் சீனி கைத்தொழில் அபிவிருத்தியின் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் இலங்கை சீனி கைத்தொழில் அபிவிருத்தி குழுவை தாபிப்பதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது