• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து தொழிற்சாலைகளைத் தாபிப்பதற்காக காணித்துண்டுகளை குறித்தொதுக்குதல்
- பிராந்திய மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு கின்றது. இதன் கீழ் பிராந்திய மட்டத்தில் தாபிக்கப்பட்டுள்ள கைத்தொழில் பேட்டைகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களை இனங்காண்பது பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுக்களின் சிபாரிசுகளின் மீது மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைவாக, இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள 25 முதலீட்டாளர்களுக்கு 35 வருட கால குத்தகை அடிப்படையில் ஹோமாகம, களுத்துறை, மில்லாவ, குருவிட்ட நாலந்த எல்லாவல, எம்பிலிபிட்டிய, கலிகமுவ, மட்டகளப்பு, திருகோணமலை, அம்பாறை நவகம்புற, பொலன்நறுவை லக்ஷ உயன, கரந்தெனிய, உடுகாவ, உலப்பனை, புத்தளம் ஆகிய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித்துண்டுகளை குறித்தொதுக்குவதற்கும் பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுக்களின் சிபாரிசுகளின் மீது ஏற்கனவே கைத்தொழில் பேட்டைகளில் தமது கைத்தொழில்களை மேற்கொண்டுவரும் முதலீட்டாளர்களின் வர்த்தக பெயர்களைத் திருத்துதல், புதிய சேர்க்கைகள் உட்பட கைத்தொழில் மாற்றங்கள் போன்றவற்றை செய்யும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.