• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிவரவு, குடியகல்வு ஒழுங்குவிதிகளைத் திருத்துதல்
- குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசா வழங்கும் முறைமைக்குரியதாக தற்போதுள்ள விசா வகைகள் மற்றும் அவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்களை திருத்துவதற்காக குடிவரவு, குடியகல்வு ஒழுங்குவிதிகளைத் திருத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு திருத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விசா முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், சுற்றுலா விசாக்களின் பொருட்டு பல்வேறுப்பட்ட நாடுகளுக்குரியதாக நடைமுறையிலுள்ள மாறுப்பட்ட கட்டண முறைக்கு பதிலாக தனி கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் அதேபோன்று விசா இன்றி நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு 500 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தண்டத் தொகையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் இதன் மூலம் பிரேரிக்கப் பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக சுற்றுலா விசாவுக்கான கால எல்லையை நீடிப்பதற்கும் வர்த்தக நோக்கங்களுக்காக வழங்கப்படும் விசா கால எல்லையை பல்தடவை நுழையும் வசதிகளுடன் வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டத்திற்குரிய 1956 ஒழுங்குவிதிகள் திருத்தியமைக்கப்பட்ட வரைவினை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.