• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டையில் மருந்துபொருள் உற்பத்தி வலயத்தை தாபித்தல்
- அரசாங்க மருந்துபொருள் உற்பத்தி கூட்டுத்தாபனம் தற்போது பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளை உற்பத்தி செய்வதோடு, இந்த நிறுவனத்தினாலும் ஏனைய தனியார் நிறுவனங்களினாலும் தற்போது இந்த நாட்டிற்குத் தேவையான 02 பில்லியன் மருந்து அலகுகளை வருடாந்தம் உற்பத்தி செய்கின்றன. இந்த அளவானது சந்தைக் கேள்வியின் 12 சதவீதத்தின் பூர்த்திசெய்வதற்கு போதுமானதோடு, மீதி 88 சதவீதமான சந்தை மருந்துபொருள் தேவையானது இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் பொருட்டு வருடாந்தம் சுமார் 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்படுகின்றது.
உற்பத்தி செய்யப்படுகின்ற மருந்துபொருளுக்காக பயன்படுத்தப்படும் ஆக்கக்கூறுகளுக்காக ஏற்கவேண்டி நேரிடும் செலவிலிருந்து சுமார் 70 சதவீதம் செயற்பாட்டு மருந்து மூலபொருட்களுக்காக செலவு செய்யப்படுகின்றதோடு இந்த செயற்பாட்டு மருந்து மூலபொருட்களை உற்பத்தி செய்யும் பொறித்தொகுதியொன்றை இலங்கையில் தாபிப்பதன் மூலம் மருந்து பொருட்களுக்காக செலவு செய்யப்படும் அந்நிய செலாவணியை பாரிய அளவில் நாட்டினுள் சேமித்துக் கொள்வதற்கான ஆற்றல் கிடைக்கப்பெறும். இதற்கமைவாக அம்பாந்தோட்டை பிரதேசத்தில் 200 ஏக்கர் நிலப்பிரதேசத்தில் செயற்பாட்டு மருந்து மூலப்பொருட்கள் மற்றும் முடிவாக்கப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்வதற்காக மருந்துபொருள் வலயமொன்றை தாபிக்கும் பொருட்டு பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது