• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் / பட்டமளிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் வௌிநாட்டு பட்டப்பாடநெறிகளை நடாத்தும் இந்நாட்டு கல்வி நிறுவனங்களை பதிவு செய்தல் / ஒழுங்குறுத்தல்
- வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் / பட்டமளிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் வௌிநாட்டு பட்டப்பாட நெறிகளை நடாத்தும் கல்வி நிறுவனங்கள் இலங்கையில் நடாத்திச் செல்லப்படுவதோடு, இந்த நிறுவனங்களினால் நடாத்திச் செல்லப்படும் பாடநெறிகள் உள்நாட்டு அதேபோன்று வௌிநாட்டு மாணவர்களினாலும் கற்கப்படுகின்றன. இந்த பட்டப் பாடநெறிகளின் தரமதிப்பீட்டு சான்று மற்றும் தரப்பாதுகாப்பு உரிய தாய் பல்கலைக்கழகத்தினால் / பட்டம் வழங்கும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டாலும் இந்த நிறுவனங்கள் இந்நாட்டில் பட்டப் பாடநெறிகளை நடாத்துவதற்கு பொருத்தமான நிறுவனங்களா என்பது பற்றி அறிந்து கொள்வதோ அல்லது ஒழுங்குறுத்தப்படுவதோ இல்லை. ஆதலால், சருவதேச தரப்படுத்தலில் முதல் 500 இடங்களிலுள்ள வௌிநாட்டு பல்கலைக் கழகங்களுடனும் பட்டம் வழங்கும் நிறுவனங்களுடனும் இணைந்து இந்நாட்டில் வௌிநாட்டு பட்டப்பாடநெறிகளை நடாத்தும் கல்வி நிறுவனங்களை பதிவு செய்வதற்கு ஒழுங்குறுத்துவதற்கு வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.