• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதற்காக இலவச விசா வழங்குதல்
- ஆண்டின் ஏனைய காலங்களுக்கு ஒருங்கிணைவாக ஏப்ரல் மாதத்திலிருந்து ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மே மாத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் வெசாக் மற்றும் பொசொன் விழாக்கள் மற்றும் "எசல பெரஹரா" போன்ற பௌத்தமத விழாக்களும் கலாசார நிகழ்வுகள் பலவும் நாடுமுழுவதும் நடாத்தப்படு கின்றமையினால் பௌத்தமத நாடுகளான தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளின் பௌத்த சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்தக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துக் கொள்வதற்காக 2019 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து ஆறு (06) மாத காலத்திற்கு தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வசதிகளை பரீட்சார்த்தமாக வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கும் அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்குரிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, தென்கொரிய, கனடா, ஐக்கிய அமெரிக்க குடியரசு, சிங்கப்பூர், மலேசியா, நியூஸ்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த வசதியினை வழங்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.