• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக அமைச்சுகளுக்கு இடையிலான குழுவின் மீளமைப்பு
- 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சட்டத்தின் கீழ் தகவல் தொழினுட்ப பணிகள் தொடர்பிலான கொள்கைகளை ஆக்கும் போது அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைச்சுகளுக்கு இடையிலான குழுவொன்றை தாபிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அடங்கிய பதினேழு பேர்களைக் கொண்ட அமைச்சுகளுக்கு இடையிலான குழுவொன்றை நியமித்து இந்தக் குழுவை மீளமைப்பதற்காக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரினால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.