• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார் மற்றும் காவேரி ஆற்றுப்படுகை சார்ந்த பங்குடமை பல்சேவை அடிப்படையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்வு சார்பில் ஆகாயத்தில் மேற்கொள்ளப்படும் ஈர்ப்பாற்றல் மற்றும் காந்தவிசை ஆய்வுகளை மேற்கொள்தல்
- காவேரி படுகை மற்றும் மன்னார் படுகையினைச் சூழ அமைந்துள்ளதென கூறப்படும் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு பரப்புகளை கண்டறியும் பொருட்டு இலங்கை கடற்கரைக்கு அப்பால், ஆகாயத்தில் மேற்கொள்ளப்படும் ஈர்ப்பாற்றல் மற்றும் காந்தவிசை ஆய்வுகளை மேற்கொள்வதற்கென ஆற்றல் மற்றும் அனுபவம் வாய்ந்த பூகோள பௌதிகவியல் சார்ந்த அகழ்வுக் கம்பனியொன்றை தெரிவு செய்வதற்கான பிரேரிப்புகளுக்கான கோரிக்கைகளுக்கு ஒத்திசைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசுக்கு இணங்க, இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை Bell Geospace Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.