• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி நகரத்தில் துணை வீதியொன்றை நிர்மாணித்தல்
- கொழும்பு - இரத்தினபுரி - வெல்லவாய - மட்டக்களப்பு வீதியானது இரத்தினபுரி நகரத்திற்கு ஊடாக ஊடறுத்துச் செல்வதுடன் போக்குவரத்து நெரிசல் காரணமாக போக்குவரத்து நகர்வுகளில் பெருமளவு தாமதம் ஏற்படுகின்றது. அதன் விளைவாக ஏற்படும் எரிபொருள் விரயம் மற்றும் சுற்றாடல் மாசு காரணமாக மக்கள் பெரும் அழுத்தத்திற்கு உட்படுகின்றார்கள். போக்குவரத்து நெரிசலை விட அடிக்கடி இடம்பெறும் வௌ்ளப்பெருக்குகள் காரணமாக இவ்வீதியில் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுகின்றது. தீர்வு நடவடிக்கையொன்றாக, நகரப் பகுதியினைத் தவிர்த்து உயர் வௌ்ள மட்டத்திற்கு மேலாக துணை வீதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வெரலுப்பேயிலிருந்து வறக்காதொட்ட பாலம் வரையான 2.20 கிலோ மீற்றர் நீளம் கொண்ட 04 வரிசையொழுங்கு துணைவீதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டும் கூறப்பட்ட துணைவீதியில் 900 மீற்றர் நீளம் கொண்ட 03 பாலங்களை நிர்மாணிக்கும் பொருட்டும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.