• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை - ஹக்மன வீதியின் முதல் 02 கிலோ மீற்றர் வரையிலான பகுதியை விரிவுபடுத்துதலும் விருத்தி செய்தலும்
- மாத்தறை - ஹக்மன வீதியின் 24.14 கிலோ மீற்றர் வீதிப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, இவ்வீதிக்கான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பல்வேறுபட்ட நடைமுறைச் சிரமங்கள் காரணமாக அதன் முதல் 02 கிலோ மீற்றர் பகுதியின் அபிவிருத்தி பணிகள் தற்போதுவரை தாமதமடைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்படவுள்ள தெற்கு அதிவேகப் பாதைக்கு இலகுவான அணுகுவழியினை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் இந்த வீதியானது மாத்தறை நகர பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, 869 மில்லியன் ரூபா செலவில் மாத்தறை - ஹக்மன வீதியின் முதல் 02 கிலோ மீற்றர் பகுதியை அபிவிருத்தி செய்யும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.