• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு புதிய கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு புதிய கட்டடத் தொகுதியொன்றை வடிவமைத்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை M/s. Sanken Construction (Pvt.) Ltd நிறுவனத்திற்கு 3,054.2 மில்லியன் ரூபா தொகைக்கு கையளிக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.